சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம்போர்டு மற்றும் கேரளா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டு கொண்டதின் பேரில் 60 பேரை கொண்ட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை கேரளா விரைந்தது. . மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தவும், பக்தர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலும் மற்றும் மழை வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளிலிருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் கேரளா செல்லும் இந்த குழு பம்பை நதி பகுதி மற்றும் சன்னிதானம் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது.