சிவகங்கை மாவட்டம், கொந்தகையில் அரசின் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் முறைகேடு நடப்பது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை ஒருமையில் பேசி தாக்க முயற்சித்த நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடை எண் 412ல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்காமல் இரண்டில் ஒன்று மட்டும் வழங்கப்பட்டது குறித்து கேட்ட செய்தியாளரிடம் விற்பனையாளர் ராமநாதன் வாக்குவாதம் செய்தார். இதுதொடர்பான செய்தி வெளியான நிலையில், ராமநாதன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதையும் பாருங்கள் - ஸ்கெட்ச் போட்டது நண்பனுக்கு, ஜஸ்ட் மிஸ்ஸில் தாய் பலி