தென்காசியில் திமுகவை சேர்ந்த ஒன்றிய குழு கவுன்சிலர் ஒருவர், சாலை பணிக்காக டெண்டர் எடுத்ததற்கான கமிஷன் தொகை வரவில்லை எனக்கூறி, ஒன்றிய குழு தலைவரிடம் வாக்குவாத்தில் ஈடுபடும் வீடியோ வெளியானது. தென்காசி ஒன்றிய குழு தலைவரான ஷேக் அப்துல்லாவிடம், ஒன்றிய கவுன்சிலர் அழகுசுந்தம் என்பவர், தனக்குரிய 3 லட்சம் ரூபாய் கமிசன் எங்கே? என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.