சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைந்த இந்திய இராணுவ படையினர், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினர். சென்னை காரிசன் பட்டாலியனில் இருந்து சென்ற இராணுவ படையினர், புதுச்சேரியின் கிருஷ்ணாநகர், குபேர் நகர் மற்றும் ஜீவா நகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 600க்கும் மேற்பட்டோரை மீட்டனர்