திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக மதுரை மத நல்லிணக்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், கோவில் விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்படும் சங்பரிவார் அமைப்பினரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தினார்.