கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூா்த்திக்கும், ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.