மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரிகரை திம்மாநாயக்கன் படித்துறையில் உள்ள அருள்மிகு பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலயத்தின் 7-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மை வேண்டி நடத்தப்பட்ட இந்த திருவிளக்கு பூஜையில் மஞ்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் திருவிளக்கிற்கு பூஜைகள் செய்து பெண்கள் வழிபட்டனர்.