திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் இரண்டாம் நாளையொட்டி, பஞ்ச மூர்த்திகள் இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது