கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிசுமையால், 5 மாத குழந்தையுடன் வேலை பார்த்து வந்த ஆஷா பணியாளரின் குழந்தை குளிர் ஜுரத்தால் உயிரிழந்தது. பணிச்சுமை கொடுத்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையை பறிக்கொடுத்த ஆஷா பணியாளர் புகார் அளித்துள்ளார். தாழ்கெண்டிகல் கிராமத்தை சேர்ந்த ரேவதி கல்வராயன் மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு எடை குறைவாக குழந்தை பிறந்துள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், ரேவதியும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் செவிலியர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என ரேவதியை மிரட்ட, அவரும் 5 மாத குழந்தையுடன் பணிக்கு சென்றதாக கூறப்படுகிறது.