இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 8 வயது சிறுமி. சிறுமியின் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வடமாநில கொடூரன். சிறுமியின் உடலில் இருந்த கொலையாளியின் முடியை வைத்து DNA பரிசோதனை. வடமாநில இளைஞருக்கு ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கிய விருதுநகர் போக்சோ நீதிமன்றம். தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையிட்டு மனுவை தாக்கல் செய்த குற்றவாளி. போக்சோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததா உயர்நீதிமன்ற மதுரைக் கிளை? நடந்தது என்ன?2020ஆம் ஆண்டு. பள்ளி முடிஞ்சு வீட்டுக்கு வந்த 8 வயசு சிறுமி ஒருத்தங்க, தன்னோட தாய் கிட்ட இயற்கை உபாதை கழிக்க போறதா சொல்லிட்டு வீட்ட விட்டு கிளம்பிருக்காங்க. ஆனா சிறுமி ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரவே இல்லை.பக்கத்துல எங்கையாவது மகள் விளையாடப் போய்ருப்பான்னு நினைச்ச பெற்றோர், சாயங்காலம் 7 மணி வர வெயிட் பண்ணி பாத்துருக்காங்க. ஆனா அப்பவும் சிறுமி வீட்டுக்கு வரல. இதனால பதற்றமடைஞ்ச பெற்றோர் சிறுமிய தேடி கிராம ஃபுல்லா அலைஞ்சுருக்காங்க. ஆனா சிறுமிய எங்க தேடியும் காணல. அப்ப அங்குள்ள முட்புதருக்குள்ள போய் பாத்துருக்காங்க. அங்க சிறுமி உடல் ஃபுல்லா காயங்களோட உயிரிழந்து கிடந்துருக்காங்க.இதபார்த்து அதிர்ச்சியடைஞ்சு பெற்றோர் சிறுமி கிடந்த கோரத்த பாத்து கதறி அழுதுருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சாங்க.அடுத்து சிறுமியோட பெற்றோர் கிட்ட இருந்து விசாரணைய ஸ்டார்ட் பண்ணாங்க போலீஸ். சிறுமி எப்ப வீட்ட விட்டு வெளியில போனாங்க, உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கான்னு பெற்றோர் கிட்ட கேட்ருக்காங்க போலீஸ். ஆனா பெற்றோர் கிட்ட இருந்து எந்த ஒரு துப்பும் கிடைக்கல.அதனால போலீஸ் கிராம மக்கள் எல்லார் கிட்டயும் விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்ப பக்கத்துல உள்ள பட்டாசு ஆலையில வேலை செஞ்ச மொசாம் அலி-ங்குற இளைஞன் தான் இந்த கிராமத்துல சுத்திட்டு இருந்தான், எங்களுக்கு அவன் மேல தான் சந்தேகமா இருக்குன்னு சொல்லிருக்காங்க.பொதுமக்கள் சொன்னத வச்சு போலீசார் மொசாம் அலிய பிடிச்சுட்டு வந்து விசாரிச்சுருக்காங்க. அப்ப சிறுமியோட கொலைக்கும், எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லன்னு சொல்லிருக்கான் மொசாம் அலி. இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல சிறுமிய யாரோ பாலியல் வன்கொடுமை செஞ்சு, கழுத்த நெரிச்சு கொலை செஞ்சிருக்கலாம்னு குறிப்பிட்டு இருந்துச்சு.இது மட்டும் இல்லாம, சிறுமியோட உடம்புல முடி ஒன்னு இருந்துருக்கு. இத கைப்பற்றி டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அனுப்பி வச்ச போலீஸ், ரிப்போர்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. அதுல அந்த முடி, மொசாம் அலியோடதுன்னு கன்பார்ம் ஆகிருக்கு. இதனால அவர கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க.சிவகாசிய சேந்த 8 வயது சிறுமி பக்கத்துல உள்ள ஸ்கூல்ல 3ம் வகுப்பு படிச்சுட்டு இருந்தாங்க. வழக்கம்போல பள்ளி முடிச்சு வீட்டுக்கு போன சிறுமி, இயற்கை உபாதை கழிக்க பக்கத்துல உள்ள முட்புதருக்கு போய்ருக்காங்க. அப்ப அந்த முட் புதருக்குள்ள மறைச்சுருந்து ஆபாச படம் பார்த்துட்டு இருந்த மொசாம் அலி-ங்குற நபரு, சிறுமிய சரமாரியா தாக்கிருக்கான். சிறுமி கத்தாம இருக்க வாயில துணிய வச்சு அடைச்ச மொசாம் அலி, சிறுமிய பாலியல் வன்கொடுமை செஞ்சு சித்ரவதை பண்ணிருக்கான். அதுக்கடுத்து சிறுமி பேச்சு மூச்சு இல்லாம கிடந்தத பார்த்து அதிர்ச்சியடைந்த மொசாம் அலி, இவள இப்படியே விட்டுட்டு போன நம்மள மாட்டி விட்ருவான்னு நினைச்சு, சிறுமிய கழுத்த நெரிச்சு கொலை பண்ணிட்டு தப்பிச்சு போய்ட்டான்.இந்த விஷயத்த கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு போன சிவகாசி நகர் போலீஸ், மொசாம் அலி மேல போக்சோ வழக்கு ஃபைல் பண்ணி அரெஸ்ட் பண்ணிருந்தாங்க.அடுத்து இந்த வழக்க விசாரிச்ச விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் மொசாம் அலிக்கு ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுச்சு.ஆனா இந்த தண்டனைய எதிர்த்து மொசாம் அலி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில மேல் முறையீட்டு மனுவ தாக்கல் பண்ணிருக்கான். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி அமர்வுல விசாரணைக்கு வந்துச்சு.அப்ப அரசு தரப்புல வாதிட்ட வழக்கறிஞர் ஒருத்தரு, உயிரிழந்த சிறுமியோட உடம்புல இருந்து கொலையாளியோட முடி எடுக்கப்பட்டு, அத டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி, அறிவியல் பூர்வமாக மொசாம் அலி தான் கொலையாளின்னு காவல் துறை நிரூபிச்சுருக்காங்க.அதனால மொசாம் அலிக்கு வழங்குன தண்டனைய உறுதி செய்யனும்னு வாதிட்டுருக்காங்க.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் விதிச்ச தீர்ப்ப உறுதி செஞ்சு உத்தரவிட்டுருக்காங்க...இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews | LatestNews