தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி மலைப்பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற பூச்சொரிதல் மற்றும் 18 ஆம் படி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விளக்குகளால் ஜொலித்த 18 படிகளுக்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கிட பூஜை நடைபெற்றது.