வேலூர் மாவட்டம் வள்ளிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற திருப்படி திருவிழாவில் திரளானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். வள்ளிமலை முருகன் சமய அறக்கட்டளை சார்பில் சுப்பிரமணியன் கோவிலில் திருப்படி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, திரளான ஆண்களும், பெண்களும் வேண்டுதல்கள் நிறைவேறவும், உலக நலனுக்காகவும் மலை மேல் உள்ள கோவிலுக்கு பால்குடம் எடுத்து படியேறிச் சென்று முருகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டதோடு, வள்ளி தெய்வானையையும் தரிசனம் செய்தனர்.