தனது தாயுடன் தகாத உறவில் இருந்த கூலித் தொழிலாளியை 2 முறை கண்டித்த இளைஞர். கண்டிப்பையும்மீறி இளைஞரின் தாயை பார்க்க வீட்டுக்கே வந்த கூலித் தொழிலாளி. தாய்க்கும் கூலித்தொழிலாளிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது திடீரென வீட்டுக்குள் வந்த இளைஞர். கூலித்தொழிலாளியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டும், சுத்தியலால் அடித்தும் கொலை செய்த இளைஞர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய இளைஞர் சிக்கினாரா? நடந்தது என்ன? கொடைக்கானல், வில்பட்டி பக்கத்துல உள்ள சர்வே நம்பர் பகுதியை சேர்ந்தவர் தான் 45 வயசான கூலித்தொழிலாளி கோபாலகிருஷ்ணன். இவரோட மனைவி கடந்த பத்து வருஷத்துக்கு முன்னால தற்கொலை பண்ணிட்டாங்க. மதுபோதைக்கு அடிமையாகி தினமும் அடிச்சி கொடுமைப்படுத்துனதால தான் தற்கொலை பண்ணிருக்காங்க கோபாலகிருஷ்ணனோட மனைவி. அதுக்குப்பிறகு தனியாதான் வாழ்ந்துட்டு இருந்துருக்காரு கோபாலகிருஷ்ணன். அதேமாதிரி, அதே பகுதியில இருந்த பரமேஸ்வரியோட கணவரும் உடல்நிலை சரியில்லாம உயிரிழந்துட்டாரு. அதனால், தன்னோட 24 வயசான மகன் மனோஜ்குமார், ரெண்டு மகள்கூட இருக்காங்க பரமேஸ்வரி. சில்வர் ஃபால்ஸ்கிட்ட உள்ள ஒரு கடையிலதான் வேலை பாத்துட்டு இருந்தாரு மனோஜ்குமார். இதுக்குமத்தியில பரமேஸ்வரிகூட கோபாலகிருஷ்ணனுக்கு தகாத உறவு ஏற்பட்டதா சொல்லப்படுது. அடிக்கடி பரமேஸ்வரி வீட்டுக்கு வந்து போய்ருக்காரு கோபாலகிருஷ்ணன். அதுவும், மனோஜ்குமார் கடைக்கு வேலைக்கு போனபிறகுதான் வந்து போய்ருக்காரு. சிலநேரங்கள்ல கடைக்குப்போயிட்டு பாதியிலேயே வீட்டுக்கு வந்துருக்காரு மனோஜ்குமார். அப்படி ரெண்டுமுறை வீட்டுக்கு வந்தப்ப கோபாலகிருஷ்ணனை பாத்த மனோஜ்குமார் அவரையும் அவரோட தாயையும் கண்டிச்சதா தெரியுது. ஆனாலும், ரெண்டுபேருமே அத காது குடுத்து கேக்குறமாதிரி தெரியல. அப்படிதான் சம்பவத்தன்னைக்கும் பரமேஸ்வரியை பாக்குறதுக்காக அவங்க வீட்டுக்கு வந்துருக்காரு கோபாலகிருஷ்ணன். வந்ததும், சமைச்சி வைக்கலயா? நான் வருவேனு தெரியாதானு பரமேஸ்வரிக்கிட்ட கணவன்மாதிரி அதிகாரமா கத்திருக்காரு. அப்போ, திடீர்னு வீட்டுக்குள்ள வந்த மனோஜ்குமார் காதுல கோபாலகிருஷ்ணன் அதிகாரமா பேசுனது விழுந்துருக்குது. அதகேட்டு டென்ஷன் ஆன மனோஜ்குமார், வீட்டுக்கு வராதீங்கனு ஆயிரம்முறை சொல்லிட்டேன், எங்க அம்மாக்கிட்ட அதிகாரமா பேச நீ யாருனு கேட்டு அடிச்சிருக்காரு. பதிலுக்கு கோபாலகிருஷ்ணனும் மனோஜ்குமாரை அடிக்க கைய ஓங்கிருக்காரு. அதனால, இன்னும் கோவத்தோட உச்சிக்குப்போன மனோஜ்குமார், என் வீட்டுக்கு வந்து என்னையவே அடிக்கிறியானு தரதரனு இழுத்துட்டு வந்து சுத்தியலால அடிச்சிருக்காரு. அடுத்து, தலையில கல்ல தூக்கிப்போட்டு கொலை செஞ்சிட்டு ஓடிட்டாரு. மறுநாள் காலையில பிடிபட்ட இளைஞர் மொத்த உண்மையையும் சொல்லிருக்காரு. பலமுறை சொல்லியும் தாயும், கூலித்தொழிலாளியும் காது குடுத்து கேக்காததால, இளைஞர் கம்பி எண்ணுற நிலைக்கு தள்ளப்பட்ருக்காரு.