கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் நகைக்கடை செட்டரை கட்டிங் மெஷின் மூலம் அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சீனிவாசன் என்பவர் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சீனிவாசன் வழக்கம்போல் 18ஆம் தேதி காலையில் கடையை திறந்து பார்த்தபோது ஷட்டர் அறுக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 2 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். ஆனால் நகைகள் எதுவும் திருடு போகவில்லை, இது வெறும் திருட்டு முயற்சிதான் எனவும் தெரியவந்தது.