வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வாடகை கேட்க சென்ற மூதாட்டியையும், அவரது மகனையும் அலுவலகத்துக்குள் வைத்து வழக்கறிஞர் பூட்டி சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. ஜோலார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ராமசந்திரன் என்பவர் சுண்ணாம்புப்பேட்டை பகுதியில் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து 10 ஆண்டுகளாக அலுவலகம் நடத்தி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வாடகையை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. வாடகை தொகையை கேட்க சென்ற கட்டட உரிமையாளரான மூதாட்டி சந்திரா மற்றும் அவரது மகனை, பேசிக்கொண்டிருக்கும் போதே வழக்கறிஞர் பூட்டி சென்றதாக சொல்லப்படுகிறது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் கடப்பாரையால் உடைத்து இருவரையும் மீட்டனர்.