சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் பகலில் ஆட்டோ ஓட்டிக் கொண்டு இரவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 5 ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், கரையான்சாவடியில் இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்த நபர்களை மடக்கி சோதனை செய்தபோது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.