மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா மேடை, மாடுபிடி வீரர்களுக்கான கேலரி தடுப்பு வேலி மையம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, 43 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.