திருபுவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு வடமாநிலத்தவர் சுடசுட அருவா தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் அருவா தயாரிப்பிற்கு மிகவும் புகழ்பெற்றது திருப்பாச்சேத்தி அருவா. அந்த வகையில் மற்ற அருவாக்களை காட்டிலும் திருப்பாச்சேத்தி அருவா கூர்மையாகவும் எடை குறைவாகவும் இருப்பதால் பலரும் விரும்பி வாங்குவார்கள், விறகு வெட்டும் அருவா, இறைச்சி வெட்டும் அருவா, கதிர் அருவா, மண்வெட்டி, களைவெட்டி என பல்வேறு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தயாரித்து வட மாநிலத்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.இவர்கள் மதுரையில் இருந்து கனரக வாகனங்களின் பழைய இரும்பு பட்டைகளை வாங்கி கொண்டு கிராமம் கிராமமாக சென்று அங்கேயே பட்டறை அமைத்து தேவைப்படும் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பட்டறைகளின் விலையை விட குறைவான விலையாக இருப்பதாகவும், வடமாநிலத்தவர்கள் நம் கண்முன்னேயே இரும்பை வெட்டி கத்தி தயாரித்து குறைந்த விலைக்கு தருவதால் அப்பகுதி மக்கள் பலரும், வாங்கி செல்கின்றனர்.