கோவையில் தோட்டத்து வீடுகள் உள்ள சாலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் புதிதாக காவலர் குடியிருப்புகள் அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தோட்டத்து வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், அதிகளவில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.