கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதில் தை திருவிழாவையொட்டி, கலிவேட்டை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. எட்டாம் நாள் நிகழ்ச்சியையொட்டி, எலுமிச்சை பழம் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அய்யா வைகுண்ட சாமி, வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.