கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் செல்லியம்மன் கோவில் மகமேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.பழமையான இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் மகமேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழா கடந்த வாரம் தொடங்கி முக்கிய நிகழ்வான மகமேர் திருவிழா நடைபெற்றது. மரம் மற்றும் மூங்கில்களை வைத்து, தயார் செய்யப்பட்ட 70 அடி உயர தேர், வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, செல்லியம்மன் சக்திகோஷம் முழங்க திருத்தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவிழாவின் போது பல இடங்களில் மகமேர் தேர் சாய்ந்து குலுங்கியதால் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.