திருப்பூரில் தொழில் போட்டி காரணமாக பனியன் வேஸ்ட் குடோனுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மணியக்காரம் பாளையம் பகுதியில் உள்ள ஷரிப் என்பவரது பனியன் வேஸ்ட் குடோனில் கடந்த 9 ஆம் தேதி தீப்பற்றி எரிந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் குடோனுக்கு தீ வைத்து சென்றது தெரியவந்தது. மேலும், இதேபோன்று வேஸ்ட் குடோன் நடத்தி வந்த வெங்கடேஷ் என்பவரது தூண்டுதலின் பேரில் அவரிடம் பணியாற்றும் மார்ஷல் மற்றும் சதீஷ் ஆகியோர் தீ வைத்தது தெரியவந்தது.