கடந்த மாதம் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சூட்கேஸில் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கணவன், மனைவி இருவரை கைது செய்தனர். கொல்லப்பட்ட பெண் ராஜஸ்தானை சேர்ந்த 15 வயதான சுமைனா என்பதும், அவர் பெங்களூருவில் அபினேஸ்சாகு என்பவரது வீட்டில் வேலை செய்தபோது அவரது மனைவி அஸ்வின்பட்டில் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்த நிலையில், சடத்தை சூட்கேஸில் வைத்து வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.