முட்புதருக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். மொத்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை. நகைக் கடை உரிமையாளர் கொடுத்த தகவல் மூலம் கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ். விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள். மூதாட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? கொலைகாரன் சிக்கியது எப்படி? நடந்தது என்ன?நவம்பர் 13ஆம் தேதி. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியா பொதுமக்கள் சிலர் நடந்து போய்ட்டு இருந்துருக்காங்க. அப்ப சாலையோரத்துல உள்ள முட்புதருக்குள்ள உடல் ஃபுல்லா காயங்களோட மூதாட்டி ஒருத்தங்க ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்தாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சந்தேக வழக்கா ஃபைல் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சாங்க.மூதாட்டிய யாரும் அடிச்சு கொலை செஞ்சாங்களா, இல்லன்னா வாகனம் எதுவும் மோதி மூதாட்டி உயிரிழந்துட்டாங்களான்னு பல்வேறு கோணத்துல போலீசார் அந்த ஏரியவுல உள்ள மக்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க.அப்ப மூதாட்டியோட சடலத்துல கம்மல், மூக்குத்தி, மோதிரம்ன்னு எதுவுமே இல்ல.இத நோட் பண்ண போலீஸ் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் நினைச்சுருக்காங்க. அடுத்து கொலையாளிகள் யாருன்னு தெரிஞ்சுக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. ஆனா போலீஸ்க்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கல.அதுக்கடுத்து சந்தேகப்படுற மாதிரி யாராவது தங்க நகைகள அடமானம் வைக்க வந்தா, அவங்கள பத்தி உடனே தகவல் கொடுக்கனும்னு சுற்றுவட்டார ஏரியாவுல உள்ள எல்லா நகைக்கடைகளுக்கும் இன்பார்ம் பண்ணிருக்காங்க போலீஸ்.அதுபடி சுங்கவார்சத்திரம் பகுதியில உள்ள நகைக்கடைக்கு கம்மல், மூக்குத்தி, மோதிரத்த அடமானம் வைக்க ஒருத்தரு போய்ருக்காரு. ஆனா அந்த நபரோட நடவடிக்கையில சந்தேகப்பட்ட கடை உரிமையாளர், போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிருக்காரு.உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், அந்த நபர போலீஸ் ஸ்டேஷன் கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க. அதுல அவரு பாப்பாங்குழி பகுதிய சேந்த முருகன்னு தெரிய வந்துருக்கு.அதுமட்டும் இல்லாம போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு அவரு முன்னுக்கு பின் முரணா பதிலளிச்சுருக்காரு. இதனால முருகன் தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், அவரு கிட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்குனாங்க.காஞ்சிபுரத்துல உள்ள பாப்பாங்குழிய சேந்த முருகனுக்கு கல்யாணமாகி மூணு பசங்க இருக்காங்க. இவரு டிரைவரா வேலை செஞ்சுட்டு இருந்துருக்காரு. சொந்தமா தொழில் செய்ய ஆசைப்பட்ட முருகன் சொந்தக்காரங்க, ப்ரண்ட்ஸ்ன்னு எல்லார் கிட்டயும் கடன் வாங்கி, மூணு டாடா ஏஸ் வாகனத்தை வாங்கிருக்காரு.ஆனா, சரியா ஆர்டர் கிடைக்காம முருகனுக்கு தொழில்ல பெரிய அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கு. இதனால வட்டியையும் கட்ட முடியாம முருகன் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்துருக்காரு. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி கடன் காரங்க எல்லாரும் முருகனோட வீட்டுக்கு போய்ட்டு வட்டிய கேட்ருக்காங்க.லாஸ்ட் மூணு மாசமா வட்டி பணத்த கொடுக்கவே இல்ல, எங்களுக்கு இப்ப உடனே பணம் தேவைப்படுது, அதனால எங்களோட பணத்த இப்பவே கொடுன்னு கேட்ருக்காங்க. அதுக்கு முருகன் தொழில்ல எனக்கு ரொம்ப நஷ்டம் ஆகிருச்சு, அதனால என் கிட்ட இப்போதைக்கு பணம் இல்லை, கொஞ்சம் டைம் கொடுங்க உங்க பணத்த திருப்பி கொடுத்துறேன்னு சொல்லிருக்காரு.இதகேட்டு கோபமான கடன்காரங்க இன்னும் ஒரு வாரம் தான் உனக்கு டைம், எங்க பணத்த திருப்பி கொடுக்கலனா காவல் நிலையத்துல புகார் அளிச்சுருவோம்ன்னு மிரட்டிருக்காங்க.கடன் ஒருபுறம் கழுத்த நெரிக்க, கடன் கொடுத்தவங்களோட டார்ச்சரும் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே இருந்துருக்கு. இதனால முருகன் ரொம்ப மனஉளைச்சலுக்கு ஆளாகிருக்காரு.இதுமட்டும் இல்லாம நகைகள திருடியாவது கடன அடைச்சுறனும்னு முடிவு பண்ணிருக்காரு முருகன். அதுபடி 13ஆம் தேதி நைட்டு சேந்தமங்கலத்த சேந்த மூதாட்டி ராணி சுண்டல் வித்துட்டு அந்த வழியா நடந்து போய்ட்டு இருந்தாங்க. அப்ப அவங்கள வழிமறிச்ச முருகன், சரமாரியா தாக்கிருக்கான். அடுத்து கீழ கிடந்த கல்ல எடுத்து மூதாட்டிய கை, கால், முகம்ன்னு எல்லா இடங்களையும் தாக்கி கொடூரமா கொலை செஞ்ச முருகன், மூதாட்டியோட மூக்குத்தி, கம்மல், மோதிரத்த திருடிட்டு போய்ட்டு நகைக் கடைக்கு அடமானம் வைக்க போய்ருக்கான்.ஆனா நகை கடைக்காரர் அளிச்ச தகவல வச்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் முருகன கையும், களவுமா பிடிச்சு விசாரிச்சுட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - வன்கொடுமை செய்து சிறுமி கொ*ல, கனமழையால் வெளியே தெரிந்த 'சடலம்' | CrimeNews | LatestNews