விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், தனியார் பள்ளி பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் கருப்பசாமி - ராஜ்குமார் ஆகியோர், பணி முடிந்து பைக்கில் அதிவேகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, காரியாபட்டி ஐயப்பன் கோவில் அருகே அவ்வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்தின் பக்கவாட்டில் மோதினர். இதில் இருவரும் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், விபத்தில் இருவரும் தூக்கி வீசப்படும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது.