மதுரை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னசொக்கிகுளம் JC RESIDECY, காளவாசல் ஜெர்மானூஸ், பெரியார் பேருந்து நிலையம் மதுரை ரெசிடன்சி மற்றும் பெருங்குடி அமீகா ஆகிய நட்சத்திர விடுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் நேரில் சென்று போலீஸார் சோதனை செய்தபோது, எந்த நட்சத்திர விடுதியில் இருந்தும் வெடிகுண்டு கைப்பற்றப்படாத நிலையில், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. கடந்த 30-ம் தேதி 4 பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.