48ஆவது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 27ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவித்தனர். 17 நாட்கள் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சிக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.