விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தவெக மாநாடு நடைபெற்ற திடலில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேர்கள் உடைந்து சேதமாகின. விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் நடிகரும், அக்கட்சி தலைவருமான விஜய் RAMP WALK செய்த போது, கூட்ட நெரிசல் காரணமாகவும், அவரை காண சேரை ஒன்றின் மீது ஒன்றை வைத்து அடுக்கி ஏறியதாலும் சேர்கள் உடைந்தன. மேலும் திடல் முழுவதும் தண்ணீர் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் என மலைபோல் ஆங்காங்கே குவிந்துள்ளது.