நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தங்கையின் காதலனை சகோதரனும், அவரது நண்பனும் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்தார். இவர்களது திருமணத்துக்கு குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் அப்பெண் தற்கொலைக்கு முயன்றார்.