ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தார் ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில், தார் இறக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக லாரி திடீரென தீப்பற்றியதால், தார் உருக்கும் இயந்திரம், மிக்ஸிங் இயந்திரம் என அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. பாளையக்காரர் கண்டிகையில் ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தார் ரெடிமிக்ஸ் தொழிற்சாலையில் லாரியிலிருந்து தாரை இறக்கும்பொது தீப்பற்றியது. இந்த விபத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.