மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ரத்து செய்ததாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.