நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரணிருப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட போஸ்ட் ஆபிஸ் ரோடு பகுதியில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழிய வந்த இன்னோவா சொகுசுகாரை மடக்கி சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. அப்போது காரில் இருந்த 3 நபர்களில் 2 நபர்கள் தப்பி ஓடிய நிலையில் மதுரையை சேர்ந்த மணிகண்டனை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த கஞ்சா கடத்தலில் சம்பந்தபட்ட மதுரையை சேர்ந்த மணிகண்டன், தங்கமுத்து, திருக்கம்மாள், அலி அக்பர், கல்பனாராணி, திருவெறும்பூரை சேர்ந்த கோகுல் வேளாங்கண்ணியை சேர்ந்த யோவான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து 22 லட்சம் மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து நாகை மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது நாகை மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாதவும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.இதையும் படியுங்கள் : கொடைக்கானல் மலைப்பகுதியில் கரும்பு விற்பனை அமோகம்