ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விவசாய கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதனை ஓட்டிச் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். செண்பகப்புதூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சொந்த வேலையாக மாரணூர் வழியாக காரில் சென்ற நிலையில், காரை திருப்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அருகில் உள்ள விவசாய கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.