தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், அதிக கொள்ளளவு கொண்ட மிக நீளமான கன்டெய்னர் கப்பலை கையாண்டு வரலாறு படைத்தது. பனாமாவின் கொலோன் துறைமுகத்தில் இருந்து 6724 கன்டெய்னர் பெட்டிகளுடன் 304 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலம் கொண்ட M.V. MSC Michaela கப்பல் கடந்த 21 ம் தேதி தக்ஷின் பாரத் கேட்வே கன்டெய்னர் முனையத்தில் வெற்றிகரமாக நங்கூரமிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 299.5 மீட்டர் நீளமுள்ள எம்.வி. எம்.எஸ்.சி. பெட்ரா கப்பலை கையாண்ட நிலையிலிருந்து, தற்போது 304 மீட்டர் நீளமுள்ள எம்.வி. எம்.எஸ்.சி. மைக்கேலா கப்பலை கையாளும் நிலைக்கு துறைமுகம் முன்னேறியிருப்பது அதன் செயல்பாட்டு திறனில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகிறது.