கள்ளக்குறிச்சியில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை திமுக கவுன்சிலரும், அவரது ஆதரவாளர்களும் மது போதையில் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற முருகேசன் பக்கவாத நோய் பாதித்து வீட்டிலேயே உள்ள நிலையில், அவரது வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் திமுக கவுன்சிலர் ரமேஷ் வளர்க்கும் நாய் குரைப்பதால் தூங்க முடியாமல் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பிரச்சனையில் தாக்குதல் நடந்த நிலையில், ரமேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.இதையும் படியுங்கள் : ஜெபம் செய்வதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பா*யல் சீண்டல்