தருமபுரி மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு ஏதுவாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தும், அரசு கூட்டுறவு அரவை ஆலை அமைக்கவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டக்கலைத்துறை சார்பில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மரவள்ளி முத்தரப்பு கூட்டத்தில், விலை நிர்ணயக் குழுவில் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.