கரூர் துயர சம்பவம் தொடர்பாக கடந்த இரு நாட்களில் 17 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.