கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் தொடர் விபத்து காரணமாக அப்பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்னை- திருச்சி ஜிஎஸ்டி சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 45 விபத்துகள் ஏற்பட்டதில் அதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 143 பேர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்திற்கான காரணத்தை அறிய முடியாமல் காவல் துறை தவித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் திருநாவலூர் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.