சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது லாரி மோதியதில், கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது. பெரும்பாலையை சேர்ந்த அம்சராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகனுடன் தனது பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது, சேலம் நோக்கி சென்ற லாரி மோதி இழுத்து சென்றது. இதில் மனைவி மற்றும் மகன் கண்முன்னே அம்சராஜ் உயிரிழந்தார்.