கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நகை கடையில் நான்கரை சவரன் தங்க நகையை நூதன முறையில் திருடிச் சென்ற 3 நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. ஹிஜாப் அணிந்து கொண்டு ஒரு ஆண் நபருடன் வந்த இரண்டு பெண்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த எடை குறைவான சில நகைகளை நகைப்பெட்டியில் வைத்துவிட்டு, எடை அதிகமான நகைகளை ஹிஜாப்பில் மறைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.