திருப்பத்தூரில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக, சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியது. விஜய் வித்யாலயா பள்ளி வாகனம் மோதியதில் கீழே விழுந்த முதியவர் மீது சக்கரம் ஏறி இறங்கியதில், அவரது இடது கால் நசுங்கியது.