ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது இந்த நிலையில் வரக்கூடிய பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் சுற்றி சாமி தரிசனம் செய்வதற்காக செல்லும்போது நான்கு ரத வீதியிலும் மாடுகளை சுற்றி தெரிவதினால் பக்தர்கள் அச்சம் அடைந்த வருகின்றனர் இது குறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீஷா என்ற பெண் தனது குடும்பத்துடன் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்து தெற்கு ரத வீதிகளில் சென்று கொண்டு இருந்தபோது அப்பகுதியில் சுற்றி தெரிந்த மாடு முட்டியதில் பெண் பக்தர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் மேலும் தொடர்ச்சியாக பக்தர்களைஅச்சுறுத்தி வரும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். Related Link ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்