தூத்துக்குடி சாத்தான்குளத்தில் இளைஞரை கொலை செய்துவிட்டு, அரிவாளுடன் கொலையாளிகள் டூவீலரில் வீதியில் வலம் வந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சாத்தான்குளத்தில் கடந்த 6-ம் தேதி சந்துரு என்கிற இளைஞரை ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.