சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள புறநகர் பகுதியான தாழம்பூரில் இரவு நேரத்தில் வரும் மர்ம நபர்கள், வீடுகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல், பேட்டரிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து பெட்ரோல், பேட்டரியை திருடுவதுடன், வீடுகளுக்கு வெளியே வைக்கப்படும் இன்வெர்ட்டர்களையும் திருடி செல்வதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, மர்ம நபர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.