குமரி மாவட்டம் பார்த்திவபுரம் அருகே வளையில் திரும்பிய சிமெண்ட் கலவை லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. அரியலூரிலிருந்து சிமெண்ட் கலவை ஏற்றி கொண்டு பார்த்திவபுரத்திற்கு வந்த லாரி மிகவும் தாழ்வான பகுதியில் அபாயகரமான வளைவில் திரும்பியபோது கட்டுபாட்டை இழந்து பாழடைந்த வீட்டின் மீது கவிழ்ந்தது. இதில் வீடு முற்றிலும் இடிந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்நடுர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.