Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசையில், காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வலுவடைந்து, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.
வங்க கடல் பகுதி, அரபிக்கடல் பகுதிகளுக்கு வரும் 6ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved