தமிழகத்தில், இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.இதையும் பாருங்கள் - ஆட்டத்தை தொடங்கிய ஆரஞ்சு அலர்ட் | TamilNaduWeather | Orange alert | RainAlert