காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பழைய தங்க மற்றும் வெள்ளி பல்லிகள் சிலைகள் காணாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன், பழமையான தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகள் காணாமல் போனதாகவும், தற்போதுள்ள பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.