தூத்துக்குடிமாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை திருக்கல்யாண மாதா திருத்தலமானது சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்இந்தியாவிலேயே 3 இடங்களில் இத்திருக்கல்யாணமாதா காட்சியளிக்கிறார்கள் பிரான்ஸ், பாண்டிச்சேரி, மற்றும் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தக்காலன்விளை திருக்கல்யாணமாதா திருத்தலமாகும். இத்திருத்ததல தேரோட்டத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 113வது ஆண்டு தேரோட்டத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும் அதனை தொடர்ந்து 7 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது. மாலையில் மிக்கேல் அதிதூதர் சப்பரப்பவனி அதைத்தொடர்ந்து கொடியை திருத்தல அதிபர் ஜஸ்டின் அர்ச்சித்து, கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து மறையுரை நற்கருனை ஆசீர் போன்ற வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் 5.30 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும் மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடக்கிறது.9-ம் திருவிழாவான ஜனவரி 22-ம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 10-ம் திருவிழாவான ஜனவரி 23-ம் தேதி காலையில் 5.30 மணிக்கு தேரில் முதல் திருப்பலியும் 6.30 மணிக்கு திருயாத்திரையுடன் புது நன்மை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலியில் புது நன்மை போன்ற வழிபாடுகள் நடைபெறுகிறது விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜஸ்டின் மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்இதையும் படியுங்கள் : வீரபாண்டியபட்டணம் கடற்கரையில் உருவான மணல் திட்டு