இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 2019 மக்களவை தேர்தலின் போது, கமுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத வாகனத்தில் பிரச்சாரம் செய்ததாக நவாஸ் கனிக்கு எதிராக விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.